சினிமா

அட.. இது அசுர சாதனையா இருக்கே.! டிஆர்பியில் முதலிடம் பிடித்த புதிய சீரியல்.! எதிர்பாராத ட்விஸ்ட்!!

Summary:

சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தினமும் இரவ

சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரித்து வருகிறது. இந்த தொடரில் நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ், சுலோச்சனா, பீர்த்தி சஞ்சீவ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் மீராவாக வரும் நிமிக்ஷிதா, அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். ஆனால் அவர் பிறந்தபோதே அவரது அம்மா கவுசல்யா இறந்ததால், தனது மனைவியின் மரணத்திற்ற்கு தனது ராசியில்லாத மகள் மீரா தான் காரணம் என புரிந்துகொண்டு குழந்தையில் இருந்தே மீராவை வெறுத்து வருகிறார் கவுதம். தனக்கு தந்தையின் பாசம் கிடைக்காமல் அவளை வதைப்பதால், தந்தையின் அன்புக்காக ஏங்குகிறாள் மீரா.

 அந்த நேரத்தில் யுவராஜ் அவளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறான். இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு இவர்களது திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் யுவா - மீரா திருமணம் காட்சிகள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கண்ணான கண்ணே சீரியல் கடந்த வாரம் TRP ல் முதலிடம் பிடித்து இருக்கிறது. 

கண்ணான கண்ணே சீரியல் கடந்த வாரம் 11.08 புள்ளிகளை பெற்றுள்ளது. அதன் பின் இரண்டாம் இடத்தில் ரோஜா சீரியல் மற்றும் மூன்றாம் இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் ஆகியவை உள்ளன. இதுவரை டாப் 5 லிஸ்டில் கூட இல்லாமல் இருந்த கண்ணான கண்ணே சீரியல் தற்போது முதலிடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement