அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை.! பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளம் நடிகை.! அதிர்ச்சி சம்பவம்!!

அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை.! பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளம் நடிகை.! அதிர்ச்சி சம்பவம்!!


kannada-actress-dead-while-taking-fat-free-treatment

ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சேத்தனா ராஜ். பெங்களூரு அபிகெரே பகுதியைச் சேர்ந்த இவர் கன்னடத்தில் கீதா, தொரேசானி, ஒளவினா நில்டானா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் அவர் கன்னட படத்திலும் நடித்துள்ளார். 

இவர் தனது தொப்பையை குறைப்பதற்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த அறுவை சிகிச்சையை நடிகை சேத்தனா பெற்றோர்களுக்கு தெரியாமலே செய்துள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது சேத்தனா சுயநினைவை இழந்துள்ளார்.

treatment

இதனால் பதட்டமடைந்த மருத்துவர்கள் உடனே அவரை அருகிலுள்ள காடே மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ஐசியூவில் 45 நிமிடம் சேத்தனாவிற்கு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகும் அவர் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த சேத்தனாவின் பெற்றோர்கள், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை, அலட்சியமே தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு 21 வயதில் இளம்நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.