பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!kannada actor shankar rav passed away

கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல காமெடி நடிகர் ஷங்கர் ராவ் 84 வயது நிறைந்த நிலையில் நேற்று காலமானார். ஷங்கர் ராவ் Silli Lalli என்ற காமெடி சீரியலில் பாஸ் பலராஜுவாக நடித்திருந்தார்.

இந்தத் தொடரில் இவரது நடிப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நன்கு சிரிக்க வைத்து பெருமளவில் கவர்ந்தது. மேலும் அவர் நடித்த Papa Pandu  என்ற சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. ஷங்கர் ராவ் தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்துள்ளார்.

actor shankar rav

இந்த நிலையில் 84 வயது நிறைந்த அவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் நடிகர் ஷங்கர் ராவ்வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.