சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த கண்மணி சீரியல் நடிகை! மாப்பிளை இவர்தானா! தீயாய் பரவும் வீடியோ!!kanmani-serial-actress-sampavi-got-marriage

சன் தொலைக்காட்சியில் காலை தொடங்கி இரவு வரை எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தொடர் கண்மணி. இந்தத் தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்திருந்தார்.

மேலும் அதில் முத்துச்செல்வியாக நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் சாம்பவி. கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சாம்பவி ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சாதனா என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.