கண்மணி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்ததா!! இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ இதோ..

கண்மணி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்ததா...! இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ இதோ..


kanmani-serial-actress-marriage-video

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் கண்மணி. இத்தொடரில் பூர்ணிமா பாக்கியராஜ் தம்பியாக சின்னத்திரை சீரியல் நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த தொடரில் சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ்.

மேலும் இதில் முத்து செல்வி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் ஏழ்மையானா பெண்ணாக  நடித்துவந்த நடிகை சாம்பவி. இவரது  நடிப்பு ரசிகர்கள்  மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்றது. இந்நிலையில் தற்போது  சாம்பவி ஜெமினி டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'சாதனா' என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Kanmai

இந்நிலையில் சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் சாம்பவியின் திருமண  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள்  பலரும்  இந்த  புது  ஜோடிக்கு வாழ்த்து கூறி  வருகின்றனர்.