சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடி, மொட்டை மாடியில் ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை!! வீடியோவால் கிறங்கிப் போன ரசிகர்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளம


kanmani serial actress dance video viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் கண்மணி. இத்தொடரில் கண்ணனாக சஞ்சீவ் மற்றும் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் லீசா எக்லர்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

 லீசா எக்லர்ஸ் 2016 ஆம் ஆண்டு எம்.சசிகுமார் தயாரிப்பில் பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, மைடியர் லிசா, மடைதிறந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லிசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். இந்த நிலையில் தற்போது அவர் சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி, மொட்டை மாடியில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.