
நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் தனக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அவர் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்துள்ளார். மேலும் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை கங்கனா பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து இந்தி நடிகர்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் மராட்டிய அரசையும் கண்டித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளையும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், சினிமா துறையில் நான் நேர்மையாக இருக்கிறேன். அந்த துறையிலேயே என்னை பலருக்கும் பிடிக்கவில்லை. நான் ஓட்டுகளை சிதறடிப்பதால் எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement