அரசியல் தமிழகம் சினிமா

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.!

Summary:

கமல்ஹாசனுக்கு, காலில் அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. 

இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமல்ஹாசனுக்கு, காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நன்முறையில் முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ கமல்ஹாசனின் வலது காலில் ஏற்பட்ட சிறு தொற்று காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில், அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.


Advertisement