மிக முக்கியமான நாள்! முதன்முறையாக ஒன்றாக இணைந்த கமலின் ஒட்டுமொத்த குடும்பத்தினர்.! வைரலாகும் புகைப்படம்!!

kamal whole family photo viral


kamal whole family photo viral

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சதிரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் கமல் ஹாசன். அதனை தொடர்ந்து இதுவரையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர்  தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருகிறார்.மேலும் தற்போது அவரது திரைப்பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. 
 
சிறந்த நடிகராக மட்டுமின்றி கமல் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்தார். பின்னர் தற்போது அவர்  பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 என்ற படத்தில் நடித்து வருகிறார். 

kamal

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனின் 65 -வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவரது  சொந்த ஊரான பரமகுடியில் அவரது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை கொண்டாட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசனின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kamal