என்மீதான அன்பால் தன் இல்லத்திற்கு "கமல் இல்லம்" என பெயரிட்ட அண்ணனை இழந்துவிட்டேன்.! கமல் உருக்கம்.!

என்மீதான அன்பால் தன் இல்லத்திற்கு "கமல் இல்லம்" என பெயரிட்ட அண்ணனை இழந்துவிட்டேன்.! கமல் உருக்கம்.!


kamal-talk-about-gn-ramachandran

பிரபல இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று மாரடைப்பால் காலமானார். தமிழில் கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற பல வெற்றிப்படங்களைஇயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன். இந்நிலையில் ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவரது, மறைவையொட்டி திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நான் சினிமாவுக்கு நுழைந்தகாலம் தொட்டு இறக்கும் தருவாய்வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை சினிமா ரசிகர்களுக்கு தந்தார். அவரது நீட்சியாக இவரது மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்.

கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல்மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என  பல வெற்றிப்படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால் தான் கட்டிய இல்லத்திற்கு கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று, அந்த வீட்டிற்கு சற்றேரக்குறைய 30 வயதாகியிருக்கும். ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டையில் எல்டாம்ஸ் ரோட்டில் தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவிலும் மட்டுமல்ல மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர்.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்கவேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என சொல்லிவந்தார் என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர். நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஒரு அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும் தம்பி குமரவேலனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.