தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தா... ரசிகர்கள் கேள்விக்கு நடிகர் கமல் கொடுத்த தரமான பதில்!! வைரல் வீடியோ!!

தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தா... ரசிகர்கள் கேள்விக்கு நடிகர் கமல் கொடுத்த தரமான பதில்!! வைரல் வீடியோ!!


kamal-talk-about-act-with-vijay

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் கமல். அவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் கமல் இரவு, பகல் பாராமல் ஒவ்வொரு ஊராக, நாடுதோறும் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்  அண்மையில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் ரசிகர்கள் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நடிகர் கமல் பெருந்தன்மையுடன், 'தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தா நிச்சயம் அவருடன் இணைந்து படம் பண்ண தயார்' எனக் கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.