சர்ச்சையை கிளப்பிய புதிய கல்விக்கொள்கை!! சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!!

சர்ச்சையை கிளப்பிய புதிய கல்விக்கொள்கை!! சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!!


kamal support to surya

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா,மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது எனவும், முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், அனைவரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கூறியிருந்தார்.

kamal

இந்நிலையில் நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்தார். ஆனாலும் சூர்யாவின் கருத்திற்கு பல அரசியல் தலைவர்களும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து, நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . மேலும் அதில் அன்பு தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என கூறியுள்ளார்.