மீண்டும் பிரபல நடிகருடன் கூட்டணி! உறுதி செய்த கமல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

மீண்டும் பிரபல நடிகருடன் கூட்டணி! உறுதி செய்த கமல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


kamal-going-to-act-with-surya-in-next-movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி தற்போது திரையரங்கையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இதில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. மேலும் கடைசி மூன்று நிமிடங்களில் நடிகர் சூர்யா திரையரங்கையே மிரள வைத்துள்ளார்.

நடிகர் கமலின் ராஜ்கமல்  பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இப்படம்  வெற்றிகரமாக ஓடி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் படக்குழுவினர்கள், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நடிகர் கமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், கடைசி மூன்று நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்த படத்தில் கமல் மற்றும் சூர்யா இணைவது உறுதி என ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.