சினிமா

பிரம்மாண்ட வரவேற்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! இன்று அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Summary:

நடிகர் கமலுக்கு பிக்பாஸ் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் உலக நாயகனாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது 60 வருட வாழ்க்கையை கலைக்காகவே அர்ப்பணித்துள்ளார். இவருக்கென உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவ்வாறு கதாநாயகனாக, உச்ச நட்சத்திரமாக ஜொலித்த அவர் அரசியலில் களமிறங்கி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நலதிட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு, பிக்பாஸ் கம்பீரக் குரலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து போட்டியாளர்களும் அவருக்கு உச்சகட்ட மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement