சிம்புக்கு ஜோடியாக நடிக்கபோவது இவரா? வெளியான அதிகாரபூர்வ அறிவுப்பு!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் காட்டியவர் நடிகர் சிலம்பரசன்.
நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்ட அவர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சிறிது காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மேலும் இதனை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் இந்நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளவரை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#str in#maananu updates!! Proud and happy that the stage of #Maanadu will be graced having Kalyani Priyadarshan on Board pairing #STR. @vp_offl @kalyanipriyan @Vijayakumar1959 @subbu6panchu @BoopathyDeepan @hariharannaidu @johnmediamanagr #str pic.twitter.com/uw4JFevlR4
— sureshkamatchi (@sureshkamatchi) 29 March 2019