சினிமா

நடிகை கஜோலின் மகளா இவர்? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!!

Summary:

kajol with daughter photo leaked

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை கஜோல் . இவருக்கெனவே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மின்சார கனவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார்.மேலும் இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை கஜோல் பிரபல பாலிவுட் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைஸா என்கிற மகள் உள்ளார். 

தொடர்புடைய படம்

இந்நிலையில் நைசா சமீபத்தில் தனது 16 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்துக் கூறி கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் நீ இன்றும் எனது தோல்களில் இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன். நீ எவ்வளவு வளர்ந்தாலும் எப்பொழுதும் எனது இதயத்துடிப்பாகவே இருப்பாய். அது என்றும் மாறாது  என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இன்றும் இளமையாகவே இருக்கும் கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 


Advertisement