முன்னணி நடிகரின் படத்திலிருந்து திடீர் விலகல்! திரிஷாவின் இடத்தை பிடித்த பிரபல நடிகை!

முன்னணி நடிகரின் படத்திலிருந்து திடீர் விலகல்! திரிஷாவின் இடத்தை பிடித்த பிரபல நடிகை!


kajal-replaced-for-trisha-in-siranjeevi-movie

தெலுங்கு சினிமாவில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் படம் ஆச்சார்யா. கமர்சியல் படமான இதனை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். மேலும்  இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா ஒப்பந்தமாகி இருந்தார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து திரிஷா விலகினார் திரிஷா. மேலும் முதலில் கூறியதை விட, சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப்போல் மாற்றங்கள் சிரஞ்சீவி படத்தில் இருப்பதால், கதாபாத்திரம் திருப்தியாக இல்லாததால், அந்த படத்தில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்திருந்தார்.

 

trisha

இது திரிஷா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் திரிஷாவுக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.