கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்! கைவிட்டு போகும் பிரபல நடிகர்களின் படங்கள்!!Kajal miss the chance for her pregnancy

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதனால் காஜல் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகியுள்ளார்.

காஜல்  நடித்துள்ள ஹேய் சினாமிகா, பாரீஸ் பாரீஸ், கோஸ்டி, கருங்காப்பியம்  போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது காஜல் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நடிக்க கமிட்டாகியிருந்த தி கோஸ்ட்  என்ற படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kajal

மேலும் அதில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பதிலாக சோனல் சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தற்போது எப்3: பன் அண்ட் ப்ரஸ்டேஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். காஜல் ஏற்கனவே இந்தியன் 2 படத்திலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.