வாவ்.. பப்ளியா செம கியூட்டா இருக்காரே! சின்ன வயசிலேயே காஜல் எப்படி அழகா போஸ் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா!!

வாவ்.. பப்ளியா செம கியூட்டா இருக்காரே! சின்ன வயசிலேயே காஜல் எப்படி அழகா போஸ் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா!!


kajal-childhood-photo-viral

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் அவர் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

 அதனைத்தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அதனைத் அவர் அஜித், விஜய், சூர்யா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் அவர் தற்போது சிறுவயதில் ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் வாவ்..செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.