இந்தியா சினிமா

ஊரடங்கு முடிந்த பிறகு, தயவுசெய்து இதை மட்டும் வாங்குங்க! காஜல் அகர்வால் விடுத்த வேண்டுகோள்!

Summary:

Kajal agarwal request to by indian product

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது.  இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 6000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கால் பல சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் உள்ள சிறுகுறு வணிகர்கள், வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும்வகையில் நாம் ஏதேனும் செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் இந்திய உற்பத்தியாளர்களின் ஆடை, காலணி போன்ற பொருட்களையே வாங்குவோம். சிறு வியாபாரிகள் விற்கும் காய்கறிகள், பழங்கள்  வாங்குவோம். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லாமல் நமது நாட்டிற்குள்ளேயே சுற்றுலா செல்வோம். நமது ஊரில் உள்ள உணவகங்களிலேயே சாப்பிடுவோம். இதன் மூலம் மீண்டும் எழ கஷ்டப்படும் வியாபாரிகள், வணிகர்களுக்கு உறுதுணையாகவும், ஊக்குவிக்கவும் முடியும் என கூறியுள்ளார்


Advertisement