ஓ.. அது உண்மைதானா! ஒருவழியாக போட்டுடைத்த காஜலின் கணவர்! தீயாய் பரவும் புகைப்படம்!!

ஓ.. அது உண்மைதானா! ஒருவழியாக போட்டுடைத்த காஜலின் கணவர்! தீயாய் பரவும் புகைப்படம்!!


kajal-agarwal-pregnant-photo-viral

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து காஜல் விஜய், சூர்யா, அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வந்த அவர் 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான
கெளதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

காஜலுக்கு திருமணமாகி ஓராண்டுகள் ஆனநிலையில், சமீபகாலமாக அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து காஜல் எதுவும் தெரிவிக்காத நிலையில் புத்தாண்டு அன்று அவரது கணவர் கெளதம் கிட்சுலு காஜலின் புகைப்படத்தை பகிர்ந்து 2020ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என குறிப்பிட்டு கர்ப்பமாக இருப்பது போன்ற எமோஜியை பகிர்ந்துள்ளார். 

இதனிடையே காஜல் கர்ப்பமான தோற்றத்துடன் தனது கணவருடன் நிற்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

kajal