சினிமா

புதிய அவதாரம் எடுக்கிறார் காஜல் அகர்வால்!! குஷியில் ரசிகர்கள்!!

Summary:

kajal agarwal next plan


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். 

2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.

தொடர்புடைய படம்

இந்நிலையில், தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் காஜல் அகர்வால். நானி நடிப்பில் வெளியான ‘Awe’ தெலுங்குப் படத்தை இயக்கிய பிரஷாந்த சர்மா, இந்தப் படத்தை இயக்கவுள்ளார். 


Advertisement