சினிமா

நடிகை காஜல் அகர்வாலுக்கு டும்டும்டும்! மாப்பிள்ளை இவர்தானா? அவரே வெளியிட்ட தகவலால் இதயம்நொறுங்கிய இளசுகள்!

Summary:

நடிகை காஜல் அகர்வாலுக்கு கௌதம் கிச்லு என்பவருடன் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு வரும் 30ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் எனது குடும்பத்தினர்கள் சூழ மும்பையில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற உள்ளது. நாங்கள் எங்களது வாழ்க்கையை ஒன்றாக தொடங்கவிருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்மீது காட்டிய அன்பிற்கு நன்றி என கூறியுள்ளார்.

View this post on Instagram

♾🙏🏻

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


Advertisement