இரட்டை சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன காஜல் அகர்வால்.! இதுதான் காரணமா?

இரட்டை சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன காஜல் அகர்வால்.! இதுதான் காரணமா?


kajal agarwal 2 movies released in oneday

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.  இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

kajal agarwal

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ரணரங்கம் என்ற திரைப்படத்திலும் காஜல் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த இரு திரைப்படமும் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



 

இந்நிலையில் இதுகுறித்து காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.