சினிமா

இதுவரை கைதி படம் செய்த வசூல் சாதனை இத்தனை கோடியா! வெளியான புதிய தகவல்.

Summary:

Kaithi movie

மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் கைதி. இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் தமிழில் அறிமுகமாகியுள்ளார். 

மேலும் இந்த படத்தில் சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த திரில்லர் படமான இப்படம் விஜயின் பிகில் படம் வெளியாகும் அதே சமயத்தில் வெளியானது. எனவே பாதி திரையரங்குகள் அனைத்து பிகில் படத்தை வெளியிட்டதால் கைதி படம் ஒரு சில திரையரங்கில் மட்டுமே வெளியானது. 

ஆனால் கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றதும் இப்படத்தின் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் அதிகரிக்க தொடங்கின. 

மேலும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை தமிழகம் எங்கும் 58 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Advertisement