அந்த பெண்ணா இது? காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் இப்பபோ எப்படி இருகாங்க பாருங்க.. வைரல் புகைப்படம்

அந்த பெண்ணா இது? காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் இப்பபோ எப்படி இருகாங்க பாருங்க.. வைரல் புகைப்படம்


Kadhal movie sandhaya friend saranya latest photo goes viral

காதல் படத்தில் படத்தின் நாயகி சந்தியாவுக்கு தோழியாக நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், காதல் சந்தியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெறும் வெற்றிபெற்ற திரைப்படம் காதல். பைக் மெக்கானிக்காக வேலைபார்க்கும் இளைஞரும், வசதியான வீட்டை சேர்ந்த பள்ளி மாணவியும் காதலித்து வீட்டை விட்டு ஓடுவது, பின் திருமணம் செய்துகொள்வது என படம் முழுவதும் ஒரே காதல் காட்சிகளாக இடம் பெற்றிருக்கும்.

Kadhal movie

மேலும் படத்தின் இறுதியில் படத்தின் கதாநாயகன் பரத் முருகன் என்ற கதாபாத்திரத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகள் இன்றுவரை பிரபலம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு பரத்தின் கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. படத்தின் நாயகன் பரத் மற்றும் நாயகி சந்தியா தவிர படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த பெண்ணும் மக்கள் மனதில் இன்றுவரை இடம்பிடித்துள்ளார்.

ஒருசில காட்சிகளே அவர் நடித்திருந்தாலும், "உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா" என அவர் பேசிய வசனம் இன்று வரை பிரபலம். காதல் படத்தில் நடித்திருந்த இவரது பெயர் சரண்யா, காதல் படத்தை அடுத்து பேராண்மை படத்தில் நடித்த இவர் அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

அதன்பிறகு இவர் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. இந்நிலையில் "அவள்" என்கிற யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் சரண்யா. அதில், பார்ப்பதற்கு மிகவும் குண்டாக, ஆளே மாறியுள்ளார். அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kadhal movie

நன்றி: அவள் யூடியூப் சேனல்