சினிமா

ஒரு போட்டோ போட்டது தப்பா.! பிக்பாஸ் ஜூலியை விடாமல் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Summary:

Julie post his old nurse photo

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர்  ஜூலி. அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.

ஜூலி  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் தனது புகைப்படத்தை  வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் அதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிடுவர்.

இந்நிலையில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் நர்ஸ் உடையில் எடுத்த புகைப்படத்தை முதன் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை திட்டி தீர்த்து வருகின்றனர். 


Advertisement