சினிமா

விஜயின் மெர்சல் படத்தில் இருந்து இதற்காகத்தான் வெளியேறினேன்-ஓப்பனாக கூறிய ஜோதிகா.

Summary:

jothika open talk

இளையதளபதி விஜயுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகைகளில் கனவு என்று கூட சொல்லலாம், ஆனால்  அட்லீ இயக்கத்தில் விஜய்யின்  61 படத்தில் விஜயுடன்  நடிக்க முன்பு விஜயுடன் நடித்து குஷி, திருமலை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஜோதிகா  திருமணம் ஆகியும்  ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த படத்தில் நடிக்க  மிகவும் ஆர்வம் காட்டி வந்த ஜோதிகா சமீபத்தில் தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்து வாங்கிய முன்பதிவு தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஏன் இப்படி செய்தார் ஜோதிகா என பலரும் குழப்பத்தில் இருந்தனர்.அதன்பிறகு நித்யா மேனன் அந்த ரோலில் நடித்தார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். "படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தான் படத்தில் இருந்து விலகிவிட்டேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த ரோலுக்காக நித்யா மேனன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் தற்போது ஜோதிகாவை விமர்சித்து பேசி வருகின்றனர்.


Advertisement