மீண்டும் நடிகர் சூர்யாவின் படத்தில் நடிகை ஜோதிகா! ஆவலுடன் காத்திருக்கும் ஜோ ரசிகர்கள்!

மீண்டும் நடிகர் சூர்யாவின் படத்தில் நடிகை ஜோதிகா! ஆவலுடன் காத்திருக்கும் ஜோ ரசிகர்கள்!


jothika in surya movie


தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தமிழக்தில் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். சமூக சேவையில் இவரது குடும்பம் தனி ஆர்வம் கொண்டவர்கள். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். 

jothika

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ´36 வயதினிலே´ படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ´மகளிர் மட்டும்´, ´நாச்சியார்´, ´செக்கச்சிவந்த வானம்´ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து "குலேபகாவலி" படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 
"ஜாக்பாட்" படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார்.