சினிமா

அடக்கொடுமையே, அழகுதேவதை ஜோதிகாவின் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

jothika act in ratsasi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா.இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் அவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு சிறிது இடைவெளி விட்டநிலையில் மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிப்பதற்காக களமிறங்கினார்.

மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கும் நடிகை ஜோதிகா அடுத்ததாக காற்றின் மொழி படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

மேலும் இதில்  பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். 

 இந்நிலையில் இந்த படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


 


Advertisement