துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகர் சூர்யாவுடன் ஜோதிகா! வைரலாகும் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகர் சூர்யாவுடன் ஜோதிகா! வைரலாகும் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!!


jothiga-with-surya-without-makeup-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த அழகிய தம்பதியினருக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

jothika

இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா அவ்வப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்துவர். இந்த நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் ஜோதிகா சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.