மீண்டும் பட்டையை கிளப்ப வரும் ஜோடி நம்பர் 1 , இதன் தொகுப்பாளர் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!jodi-no1-host-is-rio

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி நம்பர் ஒன். கிட்டத்தட்ட மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி பல சீசன்களை பார்த்துள்ளது.மேலும் பல பிரபலங்கள் இதில் தங்களது ஆடல் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

கடந்த வருடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் துவங்க உள்ளது. இதில் ராமர், ரக்‌ஷன், ஜாக்குலின், கலக்க போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷி, நந்தினி என பிரபலமான போட்டியாளர்களின் கலக்கல் நடனத்துடன் கூடிய இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

jodi no

இந்நிலையில் கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை தற்போது திரையுலகில் ஜொலிக்கும்  நடிகர் சிவகார்த்திகேயன், மாகாபா போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். 

இவர்களை தொடர்ந்து தற்போது அந்த வாய்ப்பு சரவணன் மீனாட்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த, மற்றும் பல நிகழ்ச்சிகளில் அசத்தலான பேச்சால் தொகுத்து வழங்கி வரும்  வளர்ந்து வரும் நடிகரான ரியோவுக்கு கிடைத்துள்ளது.இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் ரியோ மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டனர்.