சினிமா

நள்ளிரவில் நடிகை யாஷிகாவை சிக்கவைத்து, தப்பியோடிய பிக்பாஸ் பாலாஜி! முகத்திரையை கிழித்து ஷாக் கொடுத்த பிரபலம்!

Summary:

அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பிக்பாஸ் பாலாஜி குறித்து பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன்4  நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களுள் ஒருவரான மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகதாஸ்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி பேசினார். அப்பொழுது அவர் தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள், குழந்தை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கலாம் ஏன் குழந்தை பெத்துக்குறீங்க என உருக்கமாக பேசினார். இதனால்  போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்காக மிகவும் வருந்தினர்.

இந்த நிலையில் அவர் கூறியதெல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில்,  பாலா மதுவில் குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் பாலா  சமீபத்தில் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப் போட்டி என கூறியுள்ளார்.  இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் கூறுகையில், எங்களது அழகிப் போட்டியை டுபாக்கூர் என கூறியதற்கு  பாலா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இதுதொடர்பான லீகல் நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்படும். அதற்கு அவர் பதிலளித்து ஆகவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பாலாஜி நடிகை யாஷிகாவின் நண்பர் எனவும், அவர் கடந்த  ஆண்டு  அக்டோபர் மாதம் நள்ளிரவில் காரில் செல்லும்போது டெலிவரி செய்யும் இளைஞன் ஒருவர் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும்,  அதுமட்டுமின்றி அவர் போன் செய்ததை தொடர்ந்து அங்கு வந்த யாஷிகாதான் விபத்தை ஏற்படுத்தினார் எனவும் செய்திகள் பரவியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.


Advertisement