சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அடடே.. ரசிகர்களுக்காக ராகவா லாரன்ஸ் செய்த செயல்.! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் பிரபலமானவராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தமிழில் காஞ்சனா, முனி, சந்திரமுகி போன்ற பேய் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

பேய்களை வைத்து பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சிரிக்கும் விதமாக காஞ்சனா முதல், இரண்டு, மூன்று, நான்கு பாகங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தனது பெயரை மக்கள் சூப்பர் ஸ்டார் என்று மாற்றிக் கொண்டார்.
இது போன்ற நிலையில், இவர் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா எக்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி பலரும் இயக்குனரையும், நடிகர்களையும் பாராட்டி வந்தனர்.

படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ் "ரசிகர்களுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை. தற்போது ரசிகர்களுக்காக கல்யாண மண்டபம் ஒன்றை கட்டி அதில் என் ரசிகர்கள் இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம்" எனும் முடிவை எடுத்துள்ளேன். இது விரைவில் நடைபெறும் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.