சினிமா

இதுவரை பார்த்திராத திகில் படத்தில் களமிறங்கும் திருட்டுப்பயலே ஜீவன்! பட டைட்டிலே சும்மா மிரட்டுதே..

Summary:

jeevan act in thriller movie

தமிழ் சினிமாவில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். அதனை தொடர்ந்து அவர் காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

 அதனை தொடர்ந்து நடிகர் ஜீவன் திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மச்சகாரன், நான் அவன் இல்லை 2 போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

பாம்பாட்டம் க்கான பட முடிவு

அதனால் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நடிகர் ஜீவன் தற்போது வைத்தியநாதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஹாரர்  கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது. 

இப்படத்தை தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு போன்ற படங்களை இயக்கிய விசி வடிவுடையான் இயக்கவுள்ளார். மேலும் பாம்பாட்டம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் இதுவரை பார்த்திராத திகில் படமாக உருவாகஉள்ளதாக இயக்குனர் விசி வடிவுடையான் கூறியுள்ளார்.


Advertisement