பிரபல நிறுவனத்தின் 100-வது படம்! தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!! தீயாய் பரவும் தகவல்!!

பிரபல நிறுவனத்தின் 100-வது படம்! தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!! தீயாய் பரவும் தகவல்!!



Jeeva may act with thalapathy vojay in superhit flims movie

தமிழ் சினிமாவில் எக்கசக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தளபதியின் 66வது படமான இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பணிகள் துவங்குவதற்கு முன்பே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

vijay

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் ஜீவாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் சூப்பர்ஹிட் பிலிமஸ் தயாரிப்பில் துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், லவ் டுடே, திருப்பாச்சி மற்றும் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.