சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து! வெளியான செம மாஸ் தகவல்!

Summary:

Jayam ravi song. Single track released on sep 10

ரோமியோ ஜூலியட், போகன்  ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் உருவாகியுள்ள  ஜெயம் ரவியின் 25-வது படம் பூமி. 
இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹீரோயினாக,  ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து,   சில மாதங்களுக்கு முன்பே வெளிவருவதாக இருந்த பூமி திரைப்படம் கொரானா அச்சுறுத்தல்,  ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இதற்கிடையில் பூமி படத்தின் மூன்று போஸ்டர்கள், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது  இப்படத்தின் தமிழனென்று சொல்லடா எனும் பாடலின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இப்பாடல் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரவிருப்பதாக 
படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement