"அந்த படத்திற்காக 2 வாரத்திற்கு கேரட், தக்காளி மட்டும் தான் சாப்பிட்டேன்" - உண்மையை போட்டுடைத்த நடிகர் ஜெயம் ரவி..!!Jayam Ravi Comali Movie

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது  .

இந்த படங்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் JR30, இறைவன் போன்ற படங்களிலும் இவர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், படத்திற்காக உடல் எடையை குறைத்தது எப்படி? என்ற ரகசியத்தை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Jayam ravi

அவர் கூறியதாவது, "இரண்டு வாரத்தில் 18 கிலோ எடையை குறைக்க கேரட் மற்றும் தக்காளியை மட்டும் சாப்பிட்டேன். மேலும் எப்போதாவது தான் பிளாக் காபி குடிப்பேன் என்று கூறியுள்ளார். 

இதன் மூலம் தான் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைத்தேன்.  சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் இதனை செய்ய வேண்டாம்" என ஜெயம் ரவி கூறியுள்ளார்.