இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மலையாளத்தில் பாடிய ஒரே ஒரு பாடல்.! நடிகை என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!



jayabarathi talk about latha mangeshkar


பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

36  மொழிகளில் பாடல்கள் பாடிய இருக்கு சினிமாத்துறையில் பல விருதுகள் வழங்கப்பட்டது. சினிமாத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்த லதா மங்கேஷ்கர், பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிய நிலையில் மலையாள சினிமாவில் ஒரே பாடலை மட்டும் தான் பாடியுள்ளார். 1974இல் ராமு காரியத் இயக்கத்தில் வெளியான நெல்லு என்கிற படத்தில் இடம்பெற்ற கதலி செங்கதலி என்கிற பாடலை பாடியுள்ளார். 

அதற்கு முன்னதாக செம்மீன் படத்திலேயே கடலினக்கரை போனோரே என்கிற பாடலுக்கு லதா மங்கேஷ்கரை பாட வைக்க இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி முயற்சித்தார். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது. அதைத்தொடர்ந்து நெல்லு படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தபோது லதா மங்கேஷ்கரை அழைத்து பாடவைத்தார் சலீல் சவுத்ரி. 

இந்நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயபாரதி கூறுகையில், அந்த பாடல் எடுக்கப்பட்ட போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் 20 வருடம் கழித்து தான் அந்த பாடலின் உண்மையான பெருமை புரிந்தது. என் வாழ்க்கையில் அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.