பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்.!

பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்.!


jaya-prakash-reddy-passes-away-due-to-heart-attck

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. பிரம்மபுத்ரூடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சமரசீமா ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் இவர் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் தமிழ் திரையுலகிலும் பிரபலமானவர். தமிழில் பிரபலமான இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Jayaprakash

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.