சினிமா

அடேங்கப்பா! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கியுள்ள புது காரின் விலை என்ன தெரியுமா?

Summary:

Janhvi kapoor latest benz car rate

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். 


பாலிவுட் சினிமாவிலும் பிரபலமடைந்த இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என irantu மகள்கள் உள்ளனர்.

முதல் மகள் ஜான்வி இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார். தடக் என்ற படம் மூலம் ஹிந்தி  சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வருட புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்றுள்ளார் ஜான்வி. 

2020 புத்தாண்டை முன்னிட்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள அந்த புது காரின் விலை சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement