#"ஜுஜுபி..." ஜெய்லர் படத்தின் 3 வது பாடல்... புதிய அப்டேட்டை வெளியிட்ட படக் குழு.!jailer-third-song-update-release-by-production-team-fas

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்  வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெய்லர்.

நெல்சன் திலிப் குமார் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மலையாள உலகின் முன்னணி நட்சத்திரம் மோகன்லால், தமன்னா, கன்னட திரை உலகின் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Kollywoodசில தினங்களுக்கு முன் தமன்னா நடனத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் 'டைகர் கா ஹூக்கும்' என்ற பாடல்  வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது வரை 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 'ஜூஜூபி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.