சினிமா

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் பிரபல இளம்நடிகர்.! யார் தெரியுமா?

Summary:

jai like to act with nayanthara

தமிழ் சினிமாவில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன்  மூலம்  அறிமுகமானவர் நடிகர் ஜெய்.அதனை தொடர்ந்து அவர்  சென்னை-28 ,  சுப்ரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜாராணி என பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான ஜெய் நடிப்பில் பார்ட்டி, நீயா-2  ஆகிய படங்கள்  திரையில் வெளிவர தயாராகி இருக்கின்றன.அதனை தொடர்ந்து ஜெய்  மம்முட்டியுடன் இணைந்து  மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து ஜெய், அஞ்சலியை காதலிப்பதாகவும்,  இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அதனை மறுத்த ஜெய்.  எனக்கும், அஞ்சலிக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது. நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறினார்.

jai with nayanthara க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெய்யிடம், உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார்? என கேட்டதற்கு, எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. அவர் மிகவும் மென்மையானவர். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தோம்.

அப்பொழுது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் முழுவதும்  ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.


Advertisement