சினிமா

கடைசியில இப்படி செஞ்சுடீங்களே! வெளியான உறுதியான தகவல்! பெரும் ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸாவது தள்ளிப்போனது. இந்நிலையில் அண்மையில் ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் ரசிகர்கள் இப்படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என போஸ்டர் அடித்து ஒட்டினர். மேலும் தனுஷ் தரப்பிலிருந்தும் அதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது அதில் படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஜகமே தந்திரம் படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
 


Advertisement