சினிமா

அடஅட.. தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக.. கெத்து காட்டும் தனுஷின் ஜகமே தந்திரம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா??

Summary:

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரை

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.


இந்நிலையில் அண்மையில்  தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுவும் இப்படத்தை இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலம் உள்ளிட்ட 17 மொழிகளில் டப் செய்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஜகமே தந்திரம் திரைப்படமே 17 மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது என கூறப்படுகிறது.


Advertisement