சினிமா

விஜய் டிவி ஜாக்குலினா இது! குட்டி பாப்பாவாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

Summary:

விஜய் டிவி ஜாக்குலினின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஜாக்குலின்.  சற்று கீச்சுக்குரலுடன் இருக்கும் இவர், தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் கலகலப்பாகவே இருப்பார்.  

மேலும் ஜாக்லின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

View this post on Instagram

Kutti jacquline 🖤 and sweet mom❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

மேலும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழிBA சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அம்மாவுடன் இருக்கும் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. 


Advertisement