ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு..! விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்...!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு..! விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்...!


ispade-rajavum-idhaya-raniyum-first-look-release

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு..! விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்...! 

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் இறுதிகட்ட படப்பில் உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அமலாபாலின் அறிமுக படமான சிந்து சமவெளி படத்தில் தான் அமலாபாலுக்கு கணவராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர், அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஆனால், பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தான் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது. அதே பிக்பாஸில் போட்டியாளராக வந்த ரைசாவும் ஹரிஷும் இணைந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் அறிமுகமாகியுள்ளார்.

Latest tamil news