சினிமா

விக்ரம் இனி நடிக்கமாட்டார்..! சினிமாவில் இருந்து விலகுவதாக வந்த தகவல் உண்மையா.? விக்ரம் தரப்பு விளக்கம்.

Summary:

Is Vikram quitting films Official clarification on rumours

சியான் விக்ரம் கடைசியாக ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்திருந்தார். கடாரம் கொண்டான் படத்தை அடுத்து கோலிவுட்டின் பிரபல இயக்குனர்கள் சிலரின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆதித்ய வர்மா படம் மூலம் தமிழில் அறிமுகமான தனது மகன் துருவ் விக்ரமின் வாழ்க்கையில் விக்ரம் இனி கவனம் செலுத்த இருப்பதாகவும், அதனால்  விக்ரம் தனது நடிப்பு வாழ்க்கையை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விக்ரமுக்கு நடிப்பிலிருந்து விலகுவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் போன்ற படங்களில் நடித்துவருகிறார் விக்ரம்.

மேலும் சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் வரும் ஆண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விக்ரம் மிகவும் பிஸியாக இருப்பார் , சினிமாவை விட்டு விலகும் எண்ணம் அவருக்கு இல்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது.


Advertisement