சினிமா

இந்தியன் 2 படத்தில் திடீர் ட்விஸ்ட்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Summary:

Indian 2 movie current status

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று.

இந்நிலையில் 2.0 படத்தை அடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தொடங்கினார் இயக்குனர் சங்கர். மீண்டும் கமல் நடிப்பில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

தற்போது இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்தும் நடுவே பட்ஜெட் தொடர்பாக பெரும் மனக் கசப்புகள் இருந்து வருவதாகவும் இந்தியன் 2 படம் கைவிடப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கமலுக்கு போடப்பட்ட மேக்கப் சரி இல்லை என்பதில் தொடங்கி, இன்று தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனையில் வந்து நிற்கிறது இந்தியன் 2 . படத்தின் முழுமையான பட்ஜெட் குறித்து தயாரிப்பு நிறுவனம் சங்கரிடம் கேட்க, சங்கர் கமல் எப்போது கால்ஷீட் தருவார் என்று தெரியாத நிலையில் எப்படி தரமுடியும். ஆகவே தயாரிப்பாளர் பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல்  அமைதி காத்து வருகிறாராம் சங்கர்.

மேலும், வேறு தயாரிப்பு நிறுவனத்தை நாடலாமா என சங்கர் யோசித்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.


Advertisement