அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கணவர் உயிரிழந்த சிலமணிநேரத்தில் மாரடைப்பால் மனைவி பலி; குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ் (வயது 55). இவரின் மனைவி சுந்தரி (வயது 50). தம்பதிகள் இருவரும் அன்புடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் திடீரென சஞ்சீவ் சுருண்டு விழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இறுதி சடங்கில் நிகழ்ந்த சோகம்
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்ததால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; பதறவைக்கும் காட்சிகள்.!

இந்நிலையில், வீட்டில் கணவரின் உடலை பார்த்து கதறியழுத சுந்தரி, மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் மயங்கிய பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.
தம்பதிகள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காட்டுக்குள் ஆடு மேய்க்கச் சென்று நடந்த சோகம்; பெண் யானை தாக்கி பலி.!